பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதிக் கொடுப்பனவை அடுத்த வருடத்திற்காகவும் நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்தவுடன், காப்புறுதி கொடுப்பனவைத் தடையின்றி மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சுரக்ஷா காப்புறுதித் திட்டம் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் காலாவதியானது.
இதனால் காப்புறுதிக் கொடுப்பனவை வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அடுத்த வருடம் உள்ளீர்க்கப்படும் முதலாம் வருட மாணவர்களிடம், சுரக்ஷா காப்புறுதித் திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment