இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விசேட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக, நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (03) நள்ளிரவு முதல் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விசேட இறக்குமதி வரி குறைக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் மற்றும் கிழங்கு ஆகியவற்றுக்கான விசேட இறக்குமதி வரி 40 ரூபாவில் இருந்து 20 ரூபாவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் மீதான விசேட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment