தேர்தல் ஒன்றை கோரும் எமது போராட்டம் தொடரும் என மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
“மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர்கள் சட்ட ஆலோசனைகளை பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் நாங்கள் மேன்முறையீடு செய்வோம். தேர்தல் ஒன்றை கோரும் எமது போராட்டம் தொடரும்” என நாமல் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment