மட்டக்களப்பு, வவுணதீவு, வலையிறவு காவலரணில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் பூதவுடல், பொலிஸ் மரியாதையுடன் இன்று (02) முற்பகல் பெரியநீலாவணை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்விறுதி நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சந்திர ஜயசேகர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் இரங்கல் செய்திகள் அங்கு வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் (30) அதிகாலை மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவத்தில் பெரிய நீலாவணையைச் சேர்ந்த கணேஸ் தினேஷ் மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியானர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்னதினம் (30) ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, மேலும் ஒருவர் நேற்று (01) கிளிநொச்சி, வட்டக்கச்சியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர்கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.எம்.எம். அப்துல் காதர்
No comments:
Post a Comment