அழுத்தங்களைக் கண்டு அரசாங்கம் பீதியடையவில்லை - பந்துல குணவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, December 2, 2018

அழுத்தங்களைக் கண்டு அரசாங்கம் பீதியடையவில்லை - பந்துல குணவர்த்தன

அரசாங்கத்திற்கு கடன் வழங்க வேண்டாமென்று சிலர் சர்வதேச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான கூற்றுக்களைக் கண்டு அரசாங்கம் பீதியடையவில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (02) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்திய கடந்த அரசாங்கத்தினால், நியமிக்கப்பட்ட பொருளாதார முகாமைத்துவக் குழுவை ஜனாதிபதி இரத்துச் செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி யுகத்தில் எல்.ரி.ரி.ஈ அமைப்பிற்கு நிதி வழங்கப்பட்டமை இரகசியமான விடயமல்ல. 

திரு.ஆர்.பாஸ்கரலிங்கம் திறைசேரியின் செயலாளர் பதவியை வகித்த காலப்பகுதியில் எல்.ரி.ரி.ஈ அமைப்பிற்கு 12 கோடி ரூபாவுக்கு மேலான தொகை வழங்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இவர் கடந்த அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராக செயற்பட்டார் நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சீர்குலைவதற்கான பொறுப்பை கடந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment