மீண்டும் உதயமாகும் கல்குடா பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 31, 2018

மீண்டும் உதயமாகும் கல்குடா பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளம்

கல்குடா முஸ்லிம் பகுதிகளில் கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக இயங்கி வந்த கல்குடா பள்ளிவாயசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சில வருடங்களாக இயங்காமலிருந்தது இதனால் சமூகத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல்கள் தோன்றியது. இதனைக் கருத்திற் கொண்ட கல்குடா ஜம்இய்யதுல் உலமா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களோடு மீண்டும் இயங்குவதற்கு தயாராகியுள்ளது.

கல்குடா முஸ்லிம் பகுதிகளில் அரசியல் மற்றும் அமைப்புக்கள் என்று வேறுபாடின்றி இனிவரும் காலங்களில் சமூகத்தின் நலன்கருதி ஒற்றுமையோடு இச் சம்மேளனத்தை முன்னெடுக்க ஆரம்பகட்டமாக இடைக்கால புதிய நிருவாகிளைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்றிரவு (30) கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபைக் காரியாலயத்தில் இடம்பெற்றது இதில் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஏறாளமானோர் கலந்து கொண்டனர்.
தெரிவு செய்யப்பட்ட நிருவாகிகளின் விபாரம்:
தலைவர் ஏ.தாஹிர் மட்டக்களப்பு மாவட்ட தொழில் ஆணையாளர், பிரதித் தலைவர் ஏ.எல்.அலியார் ஹாஜியார் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர், உப தலைவர்களாக எம்.ஆப்தீன் பிறைந்துரைச்சேனை, எம்.மீரான் ஹாஜியார் காவத்தமுனை, செயலாளர் ஏ.பீ.எம்.முஸ்தபா (இஸ்லாஹி) ஓட்டமாவடி பிரதேச செயலக மொழி பெயர்ப்பாளர், உப செயலாளர் எஸ்.அலாவுதீன் (ஸலபி) ஆசிரியர், பொருளாளர் எம்.எஸ்.அஹ்ஸாப் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர்கள் நிருவாகிகளாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment