வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கம்பரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனினால் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 250 இலட்சம் ரூபா நிதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் வீதி புரமைப்புக்கு 100 இலட்சம் ரூபாவும், பாடசாலை மைதானங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாவும், ஆலயங்கள் புனரமைக்க 100 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மாங்கேணி சென்றல் தேவாலய வீதி முதலாம் இரண்டாம் குறுக்கு வீதி, வாகரை வடக்கு மதுரங்கேணி வீதி, புச்சாக்கேணி கதிர்காமர் வீதி, தட்டுமுனை பாடசலை வீதி, பால்சேனை நாககன்னி வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளது.
ஆலயங்களான ஆலம்குளம் ஸ்ரீ முருகன் ஆலயம், வட்டுவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், காயாங்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், மாவடியோடை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயம், வாகரை ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், புச்சாக்கேணி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம், அம்பந்தானவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், புளியங்கண்டலடி மாரியம்மன் ஆலயம், வாகரை மத்தி நாகதம்பிரான் ஆலயம், புனிச்சங்கேணி செந்தூர் முருகன் ஆலயம், பெரியதட்டுமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், வாலமன்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், குகனேசபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், ஆண்டாங்குளம் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம், கண்டலடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், மாங்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், இறாலோடை சித்தி விநாயகர் ஆலயம், ஒமடியாமடு விநாயகர் ஆலயம், மதுரங்கேணிகுளம் சித்தி விநாயகர் ஆலயம், புணாணை புகையிரத சந்தி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் என்பவற்றுக்கு புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளான காயாங்கேணி சரஸ்வதி வித்தியாலயம், மதுரங்கேணிகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கண்டலடி அருந்ததி வித்தியாலயம், கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றுக்கு மைதான புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
எஸ்.எம்.எம். முர்ஷித்
No comments:
Post a Comment