இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளைக் கவனத்திற்கொள்ளும் போது கடந்த வருடத்திலும் பார்க்க பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், பொறியியல் முதலான பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றோரின் எண்ணிக்கை 64.68 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கலை, வர்த்தகம், மற்றும் தொழில்நுட்ப கற்கை நெறிகளில் தூர இடங்களில் உள்ள மாணவர்கள் ஆகக்கூடுதலான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
பரீட்சையில் விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட 19 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment