கனடா பொக்கிஷம் மட்டு நகர் அமைப்பினரால் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வறிய மாணவர்கள் 300 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வட்டவான் கலைமகள் வித்தியாலயம், நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயம், இறாலோடை வள்ளுவர் வித்தியாலயம், முறாவோடை சக்தி வித்தியாலயம், கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய 300 மாணவர்களுக்கு பயிற்சிக் கொப்பிகளும், எழுது கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
கனடா பொக்கிஷம் மட்டு நகர் அமைப்பின் உறுப்பினரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமநலநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை பொக்கிஷ அமைப்பின் உப பொறுப்பாளர் எஸ்.திவ்வியன், வட்டவான் வித்தியாலய அதிபர் எஸ்.மகாலிங்கம், வட்டவான் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், ஆலய தலைவர், நாசிவன்தீவு மாதர் அபிவிருத்தி சங்க தலைவி, பெற்றோகள், நலன்விரும்பிகளும் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வறிய மாணவர்களின் கல்வி அறிவை மெருகூட்டும் வகையிலும் அமைப்பின் உறுப்பினரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமநலநேசனின் வழிகாட்டலில் கனடா பொக்கிஷம் அமைப்பு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.
எஸ்.எம்.எம். முர்ஷித்
No comments:
Post a Comment