வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் திறமைகளைப் பார்க்கும் போது நான் மிகவும் அதிசயமாகப் பார்க்கின்றேன் என்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்று (31) பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் வழிகாட்டலில் நூலக ஆசிரியர் எம்.ஐ.சபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், ஒரு தகப்பனிடத்தில் இருக்கும் திறன்கள் அந்தப் பிள்ளைகளிடத்தில் வருவது வழக்கமாகவுள்ளத்தை நாங்கள் கண்டுகொள்கின்றோம்.
ஒரு பிரதேசத்தில் கண்டுபிடிப்பாளர் ஒருவர் உள்ளார் அவரின் தந்தை துவிச்சக்கர வண்டி திருத்துனர் தந்தையின் கடையில் அந்த கண்டுபிடிப்பாளர் சிறுவயதில் சென்று சைக்கிள்களின் உதிரிப்பாகங்களை ஆராய்ந்து அதிலே கவனம் செலுத்தக் கூடியவர் அந்த மாணவனிடத்தில் அறிவு வளர்ச்சி அதே போன்று நுண்கலை சார்ந்த விடயங்களையும் கண்டுபிடிப்பதற்குறிய அந்த ஆற்றல் அவரின் பெற்றோர்களிடமிருந்து நிறமூர்த்தம் மற்றும் அனுபவங்கள் அடிப்படையிலும் பெற்றிருக்கின்றார் அவ்வாறான செயற்பாடுகள்தான் அவரைக் கண்டுபிடிப்பாளராக ஆகியுள்ளது.
அதேபோன்றுதான் இப் பாடசாலையின் அதிபரும் அவர் மேடைப் பேச்சாற்றலுள்ளவர் அதன் காரணமாக மாணவிகளின் திறமைகள் வெளிப்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.
எனவே மாணவிகளாகிய நீங்கள் நூல்களை திறன்படப் பயன்படுத்த வேண்டும் அத்தோடு அனைத்து மாணவிகளும் நூலகத்தில் அங்கம் வகிக்க வேண்டும் அதே போல் நீங்கள் பொருத்தமான நூல்களைப் பெற்று தினமும் நீங்கள் படிக்க வேண்டும் நூல்களை தேடிப்பெற்று வாசிப்பதென்பது ஒரு கட்டாய விடயமாகவுள்ளது. எனவே கூடுதலான விடயங்களை வாசிப்பதினூடாகத்தான் நாங்கள் பூரண மனிதனாகலாம்.
அரசாங்கம் தமிழ் மொழிதினம் மீலாத் தினம் போன்றவைகளை நடாத்துவது சிலருக்கு விளங்காமல் இருக்கலாம் அதை நடாத்துவதன் நோக்கம் அதில் வரும் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி இதையெல்லாம் மாணவர்கள் மத்தியில் ஊக்குவித்து இதற்கு பரிசுகள் வழங்குவதன் நோக்கம் நீங்கள் வாசிப்புள்ளவராகவும் தேடலுள்ள மாணவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment