தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இரவு 07.00 மணியளவில் இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறினார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று மாலை முக்கிய சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது, “ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய கட்சிகளை இன்று வெள்ளிக்கிழமை நான் சந்திப்பேன். அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது பற்றிப் பேசுவேன்” என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment