பாராளுமன்றம் நவம்பர் ஐந்தாம் திகதி கூட்டப்படுமா என்பதில் சந்தேகம்! - News View

About Us

About Us

Breaking

Thursday, November 1, 2018

பாராளுமன்றம் நவம்பர் ஐந்தாம் திகதி கூட்டப்படுமா என்பதில் சந்தேகம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அணியினர் தெரிவித்துவரும் மாறுபட்ட கருத்துக்களால் பாராளுமன்றம் எதிர்வரும் ஐந்தாம் திகதி கூட்டப்படுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.

நவம்பர் ஐந்தாம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

எனினும் கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிறேம்ஜய்ந்த, பாராளுமன்றம் ஐந்தாம் திகதி கூட்டப்படாது என்று தெரிவித்ததுடன், முன்னர் அறிவிக்கப்பட்டது போல் 16 ஆம் திகதியே கூட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.

தற்போது புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு முடிவு காணும் நோக்கில் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு உள்நாட்டு வெளிநாட்டு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட தொழிசார் நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடிய புதிய பிரதமர் மஹிந்த ராஜபகஷ், எதிர்வரும் ஐந்தாம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் என்று அறிவித்தார்.

பாராளுமன்றத்தை எதிர்வரும் ஐந்தாம் திகதியே கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். இதனையே சபாநாயகரும் வலியுறுத்தி வந்திருந்தார் என்று மஹிந்த ராஸபக்ஷ் நேற்றைய சந்திப்பில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை ஐந்தாம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதால் தமக்கு எந்தவொரு நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ள மஹிந்த ராஸபக்ஷ், ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அரசாங்கம் எந்தவித இடையூறும் இன்றி தொடரும் என்றும் அடித்துக்கூறியுள்ளார்.

எனினும் எதிர்வரும் ஐந்தாம் திகதி பாராளுமன்ற சுற்றுவடடத்தில் நாட்டின் அணைத்து இடங்களிலும் இருந்து மக்களை அழைத்துவந்து மஹிந்த - மைத்திரி அரசாங்கத்தை கவிழ்க்க மேற்கொள்ளும் சதித்திட்டங்களை முறிடிப்பதற்கான போராட்டமொன்றை நடத்தப்போவதாகவும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சுசில் பிறேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment