ஐ.நா செயலாளருடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல் - News View

About Us

About Us

Breaking

Friday, November 2, 2018

ஐ.நா செயலாளருடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸுடன் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

நேற்று இடம்பெற்ற இந்த தொலைபேசி உரையாடல் மிகவும் சினேகபூர்வமாக இடம்பெற்றதுடன், இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு விளக்கி கூறினார்.

இலங்கையின் புதிய பிரதமர் நியமனமானது தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கேற்ப அரசியலமைப்பிற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லிணக்க நடவடிக்கைகள் புதிய அரசாங்கத்தின் கீழ் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்;.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளுடன் எந்தவிதமான வன்முறை நிகழ்வுகளும் இடம்பெறவில்லை என்றும் அரசியல் நன்மைகளுக்காக சிலர் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் மிக விரைவில் பாராளுமன்றத்தை கூட்டியதும் தற்போது இருந்துவரும் சந்தேகங்கள் நீங்கி ஸ்திரமான நிலைமை ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் வன்முறைகளின்றி செயற்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஐ.நா செயலாளர் நாயகம், இலங்கை தொடர்ச்சியாக ஜனநாயகம் மற்றும் நல்லிணக்க நோக்கங்களுக்காக அர்ப்பணிப்புடன் இருந்து வருவது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி கேட்டுக்கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பை வழங்கதான் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு தயாராக உள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment