நாளை மற்றும் நாளை மறுதினம் சில மணித்தியாலங்களுக்கு ஹைட் பார்க் கோர்ணர் வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்பனி வீதி, ஹைட் பார்க் கார்னர், கொழும்பு 2 என்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டிடம் ஒன்றின் பணிகளுக்காக பொருத்தப்பட்ட கிரேன் இயந்திரத்தை அகற்றும் நடவடிக்கை காரணமாகவே வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி நாளை பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 10 மணி வரையும், நாளை மறுதினம் அதிகாலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரையிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது. இதற்கு மாற்று வழிகளை சாரதிகள் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment