கல்வி, உயர்கல்வி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 1, 2018

கல்வி, உயர்கல்வி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

கல்வி, உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (01) காலை இசுறுபாய கல்வி அமைச்சில் மதவழிபாடுகளை தொடர்ந்து தனது கடைமைகளை ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் கல்வி உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அரசியல்வாதிகள் மாறும் போது நாட்டின் கல்விக் கொள்கை மாற்றமடையக்கூடாதென்றும், கல்விக்கு அரசியலுக்கு அப்பால் தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றும் கல்வி உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment