தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வுகாண தோட்டக் கம்பனி உரிமையாளர்கள், தொழில்சங்க பிரதிநிதிகள் ஆகியதரப்புக்களை அழைத்து ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வும் வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விரைவான முறையில் தேர்தலுக்கு செல்வது இலக்காகும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் கருத்து வெளியிட்டார்.
மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகிறார்கள். இவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி பணியாற்றினாலும், கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் கட்சியின் கொள்கைகளை அவருக்கு நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. இதனால் கட்சியின் கொள்கைக்கு அமைவான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
2005ஆம் ஆண்டுக்கும், 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தையும், தற்போதைய சூழலையும் மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெறும் சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள் என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment