தமிழ் தேசிய கூட்டமைப்பின் வியாழேந்திரன் பிரதி அமைச்சராக சத்தியப்பிரமானம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 2, 2018

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வியாழேந்திரன் பிரதி அமைச்சராக சத்தியப்பிரமானம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இன்று (02) இடம்பெற்றுள்ளது.

இத்தகவல் பிரதமரின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.

அத்துடன், கலாசார, உள்விவகார மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஐக்கிய தேசிய கட்சி S.B. நாவின்ன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

No comments:

Post a Comment