சர்வதேச சமூகம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு முக்கிய காரணம், அவர் மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகரானவரென சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, சிங்கள ராவய அமைப்பின் ஊடகச் சந்திப்பில் அதன் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பிரபாகரனுக்கு சர்வதேசம் ஆதரவு வழங்கியமை போன்று தற்போது ரணிலுக்கும் சர்வதேச ஊடகங்கள் அதிகளவு ஆதரவை வழங்கி வருகின்றது.
இதேவேளை, நாட்டில் தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல்வேறு பின்னடைவுகளை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதனால் நாமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவதூராக பேசினோம். ஆனால் அவர் தற்போது எடுத்துள்ள முடிவை எம்மால் நம்ப முடியவில்லை.
மேலும் நாட்டின் செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு இத்தகைய முடிவை எடுப்பதற்கு மன தைரியம் மிகவும் அவசியம்.
அந்தவகையில் ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்கு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமையின் ஊடாக நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் சிறந்த முறையில் விளங்குமென்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment