இலங்கை பாராளுமன்றத்தின் கெளரவ சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்து தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் "எமக்குப் பெருமை நாட்டிற்குப் பெருமிதம்" என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
"மதிப்புக்குரிய பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாசைகளை துணிகரமாக நின்று பாதுகாத்ததுடன், நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமையாற்றிய மேன்மை தாங்கிய சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு நாட்டு மக்களின் ஆசீர்வாதங்கள்" என்பன போன்ற வாசகங்களும் எழுதப்பட்டு ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment