விசர்நாய் கடி நோய் தடுப்பு வாரம் நாளையுடன் நிறைவடைகிறது. கடந்த 29ம் திகதி முதல் விசர்நாய் கடி நோய் தடுப்பு வாரம் ஆரம்பமானது.
இதனை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டது. 5 மாத காலப்பகுதிக்குள் 8 இலட்சம் நாய்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த காலப்பகுதியில் 35 ஆயிரம் நாய்களுக்கு இனப்பெருக்க தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் நாளை நிறைவடைந்த போதிலும் எதிர்காலத்திலும் இந்த நோயை தடுப்பதற்காக தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கத்தின் கால்நடை வைத்திய அலுவலகம் எதிர்பார்த்துள்ளது.
No comments:
Post a Comment