பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2,891 பேருக்கு பதவி உயர்வு - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2,891 பேருக்கு பதவி உயர்வு

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய 2,891 பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு பதவிகள் தொடர்பான பதவி உயர்வுக்கான நேர்முகப் பரீட்சையை அடுத்து, குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழங்கப்பட்ட பதவியேற்பு விபரங்கள்
  • பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜென்ட் பதவி - 1783 பேர்
  • பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பெண் பொலிஸ் சார்ஜென்ட் பதவி - 334
  • பொலிஸ் சார்ஜென்ட் பதவியிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் பதவி - 553
  • பெண் பொலிஸ் சார்ஜென்ட் பதவியிலிருந்து பெண் உப பொலிஸ் பரிசோதகர் பதவி - 76
  • பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜென்ட் சாரதி பதவி - 124
  • பொலிஸ் சார்ஜென்ட் சாரதி பதவியிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் போக்குவரத்து பதவி - 21
ஆகிய பதவிகளுக்கு 2,891 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment