சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பெண்கள் மற்றும் விளையாட்டு விருதுகள் 2019க்கான இலங்கை பெயர்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கம் கேட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் பால் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
விளையாட்டின் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பினை ஊக்குவித்து வலுப்படுத்துவதன் மூலம் பால் சமத்துவத்துக்கான இடைவெளியை குறைக்கும் முக்கியத்துவத்தை உலகம் அங்கீகரித்துள்ளது.
இந்த நடைமுறையை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை அதன் பங்களிப்பை வழங்கும் வகையில் இந்த விருதுக்காக தகுதிபெற்ற ஒருவரை ஆசிய பிராந்தியத்தில் இருந்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் வழி முறைகளுக்கு ஏற்ப தெரிவுசெய்யவுள்ளது.
இதுவரை பால் சமத்துவம் தொடர்பான செயற்பாடுகளில் மந்த நிலையும் மௌனம் காத்ததுமே இருந்து வந்துள்ளது. எனினும் மேற்படி நடவடிக்கை மூலம் இப்போது இலங்கையிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் பெண்கள் விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்துவதற்கான அங்கிகாரம் வழங்கப்படுகிறது.
தகுதியான ஒருவரை விருதுக்காக பெயரிடும் இந்த நடைமுறை சர்வதேச வழிகாட்டலுக்கு ஏற்பவே இடம்பெறும். பால் சமத்துவத்தை மேம்படுத்தும் வகையில் பங்களிப்பினை வழங்கிய ஆண், அல்லது பெண் இந்த விருதுக்கு தகுதி பெற்றவராவார்.
விளயைட்டு மற்றும் உடல் நிலை செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு புறம்பாக பால் நிலை விவகாரங்கள் தொடர்பாக கல்வி மற்றும் நிலை விவகாரங்கள் தொடர்பாக கல்வி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுவோர் மற்றும் விளையாட்டு துறையில் பெண்கள் மற்றும் சிறுமியரை பயிற்றுவிப்போர் ஆகியோருடன் நிர்வாக மற்றும் தலைமைத்துவ விளையாட்டு துறையில் அல்லது ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பினை ஊக்குவிப்போர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேநேரம் மேற்படி பெண்கள் மற்றும் விளையாட்டு விதுகள் ஓய்வுபெற்று தொடர்ந்தும் போட்டியுடனான விளையாட்டு ஊடகவியலாளர் விளையாட்டு துறைபற்றி எழுதுபவர் அல்லது அனுசரணை வழங்குபவர் அல்லது தேசிய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச சம்மேளனம், தேசிய சம்மேளனம் ஒரு விளையாட்டு சங்கம் போன்ற பால் சமத்துவத்தை ஊக்குவிக்கும் அமைப்பு அல்லது சங்கத்துக்கும் வழங்கப்படலாம்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.olympic.org என்ற சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் இணைய தளத்தில் இருந்து விண்ணப்பப்படிங்களை தரமிறக்கிக் கொள்ளலாம். இறுதித் தேர்வு இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசித் திகதி 2018 டிசம்பர் 31ம் திகதியாகும். பின்வரும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும் natolcom@slt.lk.
No comments:
Post a Comment