அமைச்சரவையில் பங்கேற்ற ஒரு மாதத்தில் 10 அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம் - டக்ளஸ் தேவானந்தா - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

அமைச்சரவையில் பங்கேற்ற ஒரு மாதத்தில் 10 அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம் - டக்ளஸ் தேவானந்தா

ஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10 க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், அடுத்தமாதம் முதல் வாரத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வீடுகளை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதால் அதற்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி வருகின்றோம். 

பல ஆண்டுகளாக கோரிக்கையாக இருந்த சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். அதுமட்டுமல்லாது வடக்குக்கு விஷேடமாக வடக்கு அபிவிருத்தி தொடர்பில் அதிகாரசபை ஒன்றை ஏற்படுத்தவுள்ளோம்.

மேலும் தொழில் வாய்ப்புக்களின்றி காணப்படும் எமது இளைஞர்கள், யுவதிகளுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். அதேபோல வடக்கு, கிழக்கிலுள்ள குளங்களை புனரமைக்கவும். நிலத்தடி நீரைப்பாதுகாக்கவும் திட்டங்களை வகுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment