ஒழுங்காக ஆஜராகாவிட்டால் அவமானடப்பட வேண்டியிருக்கும் - முஷரப்புக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 2, 2018

ஒழுங்காக ஆஜராகாவிட்டால் அவமானடப்பட வேண்டியிருக்கும் - முஷரப்புக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

துபாயில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப், அவர் மீதான தேச துரோக வழக்கில் முறையாக ஆஜராகாவிட்டால், அவமானப்பட வேண்டி இருக்கும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். அவர்மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் அவர் போக்குகாட்டி வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (02) பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது முஷரப்பின் உடல்நிலை சீராக இல்லை எனவும், அதன் காரணத்தால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனவும் தெரிவித்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார், ஒருவேளை முஷரப் ஒழுங்காக ஆஜர் ஆகாவிட்டால், கருணையின்றி வலுக்கட்டாயமாக அவர் ஆஜர்படுத்தப்படுவார் என மிக கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்துக்குள் முஷரப்பின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 11-ம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

No comments:

Post a Comment