பிரதமர் ரணில் விக்ரமசிங்க நோர்வேக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (03) அதிகாலை புறப்பட்டு சென்றார். எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK 349 எனும் விமானத்தின் மூலம், பிரதமர் தலைமையிலான, 14 பேரைக் கொண்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்காவில் இருந்து புறப்பட்டனர்.
பிரதமர் தனது விஜயத்தின் போது நோர்வே நாட்டின் பிரதமர் எர்னா சொல்பேர்க் (Ms. Erna Solberg) பாராளுமன்ற உயர்மட்ட குழு தலைவி டோன் வில்ஹெல்ம்சென் (Ms. Tone Wilhelmsen Trøen) வெளிவிவகார அமைச்சர் (Ms. Ine Eriksen Søreide) உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் தலைவிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இவ்விஜயத்தில், மீன்பிடி, நீர் வளம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹேஷா விதானகே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
நோர்வே விஜயத்தைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment