யாழ். சாவகச்சேரியில் நீண்டகாலமாக பெண்களின் கைப்பைகளை பறித்து திருட்டில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டதுடன், அவரது வீட்டிலிருந்து இரு மோட்டார் சைக்கிள்கள், 19 ஆயிரம் ரூபாய் பணம், 18 கையடக்க தொலைபேசிகள், 4 கைப்பைகள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரின் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினால் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய குடும்பஸ்தர் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment