பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக வீதியில் போராடிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக வீதியில் போராடிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்

தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு கூறியுள்ளது. 

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தான் கடமையாற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக வீதியில் இறங்கி இன்று (03) எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தார். 

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகக் கூறி தன்னால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுதலை செய்தமைக்கு எதிராகவே அவர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். 

கைது செய்யப்பட்டவரிடம் சட்ட ரீதியான அனுமதிப்பத்திரம் இருந்ததால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் வீதியில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment