இந்த நாடு ஒரு குடும்பத்திற்கு எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளதாகச் சிலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
2015இல் தமக்கு மக்கள் வாக்களிக்கவில்லையென்றால் தாம் மின்சார கதிரை தண்டனையை அனுபவிக்க நேரும் என குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது படையினருக்கு வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்போவதாக விமர்சித்து வருகிறார்.
எம்பிலிபிட்டியில் நீர்வழங்கல் திட்டமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் தலதா அத்துகோரள இவ்வாறு தெரிவித்தார்.
தமது ஆட்சிக்காலத்தில் தாம் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்ததாகவும் துறைமுகங்களை கட்டியெழுப்பியதாகவும் விமான நிலையங்களை ஸ்தாபித்ததாகவும் கூறுபவர்கள் எம்பிலிபிட்டி மக்களுக்குத் தேவையான நீரைக்கூட வழங்க முடியாமை விந்தையாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பெளத்த சாசனத்தைப் பாதுகாக்கவும் படை வீரர்களைப் பாதுகாக்கவும் எமக்கு எவரும் கூறவேண்டிய அவசியமில்லை. நாம் பௌத்த சாசனத்தையும் படைவீரர்களையும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
அவர்களைப் போன்று சில பௌத்த மத துறவிகளுக்கு மட்டும் நாம் சலுகைகளை வழங்கவில்லை. அனைவருக்குமே வழங்குகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment