ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை பொலிஸார் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, October 1, 2018

ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை பொலிஸார் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை கோப்பாய் பொலிஸார் நேற்று (30) கைது செய்துள்ளனர். 

கோப்பாய் பகுதியில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள ஆவா குழுவினர் வந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு நின்ற இருந்த இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து வாள்கள் கொண்டு அங்கு நின்றவர்களை ஆவா குழுவினர் துரத்திச் சென்றுள்ளனர். 

இதன்போது இளைஞர் ஒருவர் கிணறு ஒன்றுக்குள் குதித்து மறைந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனை அவதானித்த வாள்வெட்டுக் குழுவினர் கிணற்றுக்குள் மறைந்து இருப்பவர் மீது கிணற்றுக்குள் வைத்தே கல்வீச்சுத் தாக்குதலை நடாத்தியுள்ளனர். 

இவ்வாறு ஆவா குழுவினர் கிணற்றுக்குள் வைத்து தாக்குவதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தனர். ஆயினும் சம்பவம் நடைபெறும் வீதியால் கோப்பாய் பொலிஸார் வந்த போது சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. 

இதனை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த இளைஞரைக் காப்பாற்றியதுடன் தாக்குதல் நடத்தி இளைஞர்களில் மூவரை கைது செய்தனர். ஆனாலும் அங்கு தாக்குதல் நடத்திய ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிகமாக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

பிரதீபன்

No comments:

Post a Comment