தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாநகர சபை வேட்பாளராகப் போட்டியிட்ட தயாளன் மீது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நேற்று (30) இரவு தாக்குதல் மேற்கொண்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் போட்டியிட்டு தற்போது மாநகர முதல்வரின் வட்டார இணைப்பாளராகப் பணியாற்றும் இ. தயாளன் சுண்டிக்குழிப் பகுதியில் மண்னைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால் குறித்த விடயத்தில் அப்பிரதேச வட்டாரத்தினை பிரதிநிநித்துவப்படுத்தும் உறுப்பினர் தனக்கு தெரியப்படுத்தவில்லை என்பதாகவே பிரச்சினை அமைந்துள்ளது.
இதனால் குறித்த இடத்திற்கு தொலைபேசியில் அழைத்து மது போதையில் தலைக் கவசத்தினால் நேற்று இரவு 9 மணி அளவில் தாக்கியதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் தாக்குதலிற்கு இலக்காணவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment