கொழும்பு குப்பைகளைப் புத்தளம் அறுவைக்காட்டு பிரதேசத்திற்குக் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனியன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஆரம்பமான உண்ணாவிரதத்தில் கட்சி பேதங்கள் இன்றிச் சகல அரசியல் கட்சிகளின் புத்தள மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது தினம் முதல் சத்தியாக்கிரகப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போராட்டத்துக்கு இன, மத பேதமின்றி ஆதரவு நல்குவதோடு போராட்டத்திலும் பங்கு பற்றி வருகின்றனர்.
இரண்டாவது நாள் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் சர்வமதத் தலைவர்கள் பங்கு பற்றியதோடுநேற்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில், புத்தளம் சட்டத்தரணிகள் சங்கத்தினர், அதன் தலைவர் சட்டத்தரணி அப்துல் காதர் தலைமையில் கலந்து கொண்டு ஆதரவளித்தனர்.
No comments:
Post a Comment