ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணி மீது தாக்குதல் - 7 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 2, 2018

ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணி மீது தாக்குதல் - 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் இன்று (02) நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ஜலாலாபாத் நகரின் அருகே அப்துல் நாசிர் முஹம்மது என்ற வேட்பாளர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது தற்கொலைப்படைதாரி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment