நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக 6 ஆயிரம் குர்ஆன் பிரதிகள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு கொட்டகலை ஊடக வளாக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. கலந்து கொண்டார்.
மத்திய மாகாண பதில் முதலமைச்சரும், மாகாண விவசாய அமைச்சருமான எம்.ராமேஸ்வரன், இ.தெ.க. பொதுச் செயலாளர் அனுஷா சிவாராஜா, பிரதி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், கனபதி கனகராஜ், பிலிப்குமார், சிவஞானம் மற்றும் இ.தெ.க. தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இ.தெ.க. தலைவர் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட மலையகத்திலுள்ள பள்ளிவாசல்கள், மந்தரஸாக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வான முயற்சிகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் உறுதியளித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment