புதிய பிரதமர் நியமனம் அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது - பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

புதிய பிரதமர் நியமனம் அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது - பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் தெரிவிப்பு

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட விதம் அரசியல் யாப்பிற்கு ஏற்புடையதென பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் தெரிவித்துள்ளார்கள்.

இன்று (31) கொழும்பில் நடந்த ஊடக மாநாட்டில் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய கலாநிதி கப்புகொல்லாவே ஆனந்தகித்தி தேரர் கருத்து வெளியிட்டார்.

முன்னைய அரசாங்கம் தேசிய அபிலாஷைகளை புறந்தள்ளி பிரிவினைவாதிகளின் தேவைகளுக்காக பாடுபட்டதென அவர் கூறினார்.

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ரஞ்சித் பிரேமலால் உரையாறறுகையில், இன்று ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமென பலர் குரல் கொடுப்பதை சுட்டிக்காட்டினார். 

2015 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி, அப்போது பதவியில் இருந்த பிரதமரும், பிரதம நீதியரசரும் நீக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எவரும் குரல் எழுப்பவில்லையென பேராசிரியர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் சுதந்த லியனகே உரையாற்றுகையில், 2015 ஜனவரி 8ஆம் திகதி இருந்த நிலவரத்தை ஆராய்ந்தால் அன்று 47 அங்கத்தவர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க பிரதமராக கடமையை பொறுப்பேற்றார் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment