தாதியர் துறை மற்றும் மேலதிக சேவைகளுக்காக 9 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 2, 2018

தாதியர் துறை மற்றும் மேலதிக சேவைகளுக்காக 9 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பம்

தாதியர் துணைச்சேவைகள் மற்றும் மேலதிக சேவைகள் சார்ந்த பதவி வெற்றிடங்களுக்காக 9 ஆயிரத்து 400 பேர் இணையத்தின் ஊடாக விண்ணப்பித்துள்ளார்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தப் பதவி வெற்றிடங்களுக்காக மூவாயிரம் பேர் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். விரைவில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறும் என சுகாதார அமைச்சு கூறுகிறது.

க.பொ.தர உயர்தரப் பரீட்சையில் இஸட் ஸ்கோர் புள்ளிகளுக்கு அமைய சுகாதார சேவைகள் சார் பதவி வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பழைய முறையின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கு காலதாமதம் ஆனது. புதிய முறையின் கீழ் மூன்று மாதங்களுக்குள் வெற்றிடங்களை நிரப்பலாம்.

No comments:

Post a Comment