விவசாயிகள் மற்றும் நலன் கருதி, சிறுபோக நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்கவும், விவசாயிகளிடமிருந்து தலா 5,000 கிலோ நெல் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
அரிசி தொடர்பில், நியாயமான சந்தை விலையொன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விவசாயிகள், நுகர்வோரின் நலன் கருதி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை சிறு போகத்தின்போது விவசாயி ஒருவரிடமிருந்து உச்சபட்சம் தலா 5,000 கிலோ கிராம் வரை நெல் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம ஆகிய இருவரினதும் கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment