தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றய தினம் வௌியாகும் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 4, 2018

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றய தினம் வௌியாகும்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (05) வெளியிடப்படவுள்ளன. கொழும்பு பாடசாலைகளின் அதிபர்கள் இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வந்து பெறுபேற்று ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகள் தபாலில் சேர்க்கப்படும். பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பெறுபேறுகளை பார்வையிடலாம். அதன் முகவரி www.doenets.lk என்பதாகும்.

இம்முறை மூன்று இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.

அதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகை 500 ரூபாவிலிருந்து 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சுமார் 15 ஆயிரம் பேருக்கு புலமைப்பரிசில் தொகை கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment