இந்தியாவின் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் தீபாவளியன்று காலை ஒரு மணித்தியாலமும் இரவு ஒரு மணித்தியாலம் மாத்திரம் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் இன்று பட்டாசு வெடிப்பதற்கான புதிய அறிவுரை ஒன்றை உத்தரவாக வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று காலையில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் பட்டாசுகள் வெடிக்கலாம். இதற்கான நேரம் வரையறுத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம். இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.
ஆனால், காலை 1 மணி நேரம், இரவு 1 மணி நேரம் என்பது நாங்கள் சொல்லும் அறிவுரைதான். எனவே, தமிழ்நாட்டில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை அம்மாநில அரசு ஆலோசித்து இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம்.
நேரத்தை எப்படி மாற்றிக்கொண்டாலும் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. இந்த நேர ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் உறுதியாக உள்ளது.
விதிகளை யாரும் மீறக்கூடாது. அவ்வாறு மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment