முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் தாம் கைது செய்யப்படுவதை தடைசெய்து உத்தரவிடுமாறு கடந்த 2017ம் ஆண்டு இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈவா வனசுந்தர, விஜித் மலல்கொட மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனு இன்று (02) எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதனை எதிர்வரும் ஜனவரி 21ம் திகதி அழைப்பதற்கு நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.
சுமார் 500 மில்லியன் ரூபா அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தம்மை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தம்மை கைது செய்வதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ள மனுதாரர்கள் இதனூடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment