கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் உள்நுழையும் திசைக்கு எதிர்வரும் 04ம் திகதி முதல் 20ம் திகதி வரை தற்காலிகமாக பூட்டு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 2, 2018

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் உள்நுழையும் திசைக்கு எதிர்வரும் 04ம் திகதி முதல் 20ம் திகதி வரை தற்காலிகமாக பூட்டு

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கட்டுநாயக்க நோக்கிய திசை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. 

அதன்படி பேலியகொட சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதி எதிர்வரும் 04ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் மூடப்பட உள்ளது. 

இதனால் சாரதிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுகின்ற அசௌகரியங்களை தடுப்பதற்காக மாற்று வழிகளை கையாளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புதிய களனி பாலம் அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இவ்வாறு போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment