சிரேஷ்ட ஊடகவியலாளரும், கவிஞருமான ஜனாப். அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் மூன்றாவது கவிதைத் தொகுதியான ‘தேவதைகள் போகும் தெரு’ நூல் வெளியீடும், SMFC அகில இலங்கை ரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 08.09.2018 (சனிக்கிழமை) அன்று பி.ப. 4.30க்கு கொழும்பு – 10, அல்-ஹிதாயா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கவிஞர் அல் அஸூமத் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், பிரதம அதிதியாக கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களும், சிறப்பதிதியாக பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நூலின் முதற்பிரதியை இலக்கியப்புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் பெற்றுக்கொள்ள, நூல் நயவுரைகளை மூத்த கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன், கவிஞரும் ஒலிபரப்பாளருமான முல்லை முஸ்ரிபா, சட்டத்தரணி ஹஸனா ஷெய்கு இஸ்ஸதீன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
சமூக ஊடக நண்பர்கள் வட்டம் SMFC நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்படும்.
நூல் வெளியீடு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளை கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் தொகுத்து வழங்கவுள்ளார்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
தகவல்
இம்றான் நைனார்
No comments:
Post a Comment