சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வைபவம் தினம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
தன் முனைப்பாற்றலுடன் முன்னோக்கி செல்லுங்கள் - சிறுவர் பருவத்திற்கு ஊக்கமளியுங்கள் என்ற தொனிப்பொருளில் கீழ் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மகளீர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய இந்த அமைச்சினால் இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முத்திரையும் கடித்த உறையும் வெளியிடப்படவுள்ளது.
விசேட ஆற்றல்களை கொண்ட சிறுவர்கள் 9 பேருக்கும் மற்றும் சர்வதேச சிறுவர் தினத்திற்கான முத்திரைக்கான படத்தை தயாரித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதுடன், விசேட தேவைகள் உடைய சிறுவர்களின் கலாசார நிகழ்வுகளும் ,பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் குறித்த நிகழ்வில் இடம்பெறவுள்ளது.
இந்த வைபவத்தில் முக்கிய உரையை சிரேஷ்ட மனோவியல் தொடர்பான விசேட வைத்தியரான சமிந்த வீரசிறிவர்தன நிகழ்த்தவுள்ளார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு மாவட்டம் மற்றும் பிரதேச மட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஒழுங்குபடுத்தியுள்ளது.
பிரச்சனை மற்றும் அனர்த்தத்திற்கு உள்ளான 1000 சிறுவர்களுக்கு இதற்கான நிகழ்ச்சிகள் 22 மாவட்டத்தில் இடம்பெறவுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.இந்த பிரதேச செயலக மட்டத்தில் தல 3 மாணவர்கள் வீதம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
200௦ ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்கள் 1000 ரூபாவுகளுக்கான சேமிப்பு கணக்கு புத்தகம் தமிழ் சிங்கள மற்றும் ஆங்கில அகராதிகள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கும் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சிறுவர் பராமரிப்பு மற்றும் சிறுவர் சேவைகள் திணைக்களத்தின் மூலம் சிறுவர் மத்தியில் சேகரிக்கப்பட்ட தயாரிப்புக்கள் குறித்த நிகழ்வும் 331 பிரதேச செயலக பிரிவில் நடைபெறவுள்ளது.ஒரு வேலை திட்டத்திட்டக்காக 5000 ரூபா நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
இம் மாதம் 30 ம் திகதி விஹாரமஹாதேவி பூங்கவில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மூலம் நடத்தப்படும் சிறுவர் தின கொண்டாட்டத்தில் சிறுவர் பராமரிப்பு மற்றும் சிறுவர் சேவை திணைக்களத்திற்கென கூடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பராமரிப்பு மற்றும் சிறுவர் சேவை திணைக்களத்த்தின் மூலம் வேலைத்திட்டம் குறித்து விபரங்கள் அதாவது நிதியுதவி பாதுகாப்பு திட்டத்தை தயாரித்த்தால் சிறுவர் சமூக சிறுவர் சபை வேலைத்திட்டம், சிறுவர் அபிவிருத்தி குழுவின் வேலைத்திட்டம் சிறுவர்களை பராமரித்தல் போன்றவைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment