இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 3, 2018

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

450g நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் நிறைவேற்று குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் இதுவரை 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரி இறாத்தல் பாண், இன்று நள்ளிரவு முதல் 65 ரூபாவாக விற்பகை செய்யப்படவுள்ளது. எவ்வாறாயினும், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் மாற்றமில்லை எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட்டதால், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விரை அதிகரிக்கப்பட மாட்டாது என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், விற்பனை செய்யப்படும் பாணின் நிறை 450 கிராமாக காணப்படல் வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம்
தெரிவித்துள்ளது.

அவ்வாறில்லையெனின், அது தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாணின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment