கிளிநொச்சியில் இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் - News View

About Us

About Us

Breaking

Monday, September 3, 2018

கிளிநொச்சியில் இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர்

கிளிநொச்சியில் முதியவர் ஒருவர் பொலிஸார் இலஞ்சம் பெறுவதற்கு எதிப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் முன்னிலையில் மரத்தில் ஏறி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 03-09-2018 காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் பின்னர் மேடை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உரையாற்றிக்கொண்டிருந்தார். இதன்போது மேடையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிபொலிஸ் மா அதிபர், ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அத் தருணத்தில் மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சத்தமிட்டுக்கொண்டிந்தார்.

உடனடியாக பொலிஸார் மற்றும் சடடத்தரணிகள் சம்பவ இடத்திற்கு சென்று முதியவருடன் பேசி அவரை மரத்தில் இருந்து இறக்கிய போது அவர் கையில் வைத்திருந்த பதாகையில் வேண்டாம் எனும் தலைப்பில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது உங்களுக்கு சேவை செய்வதற்கே, உங்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அவர்களுக்கு நீங்கள் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை எனவும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டியது உங்களின் பொறுப்பாகும் எனவும் எழுதப்பட்டிருந்தது.

இதனை கையில் வைத்திருந்த முதியவர் பொலிஸார் இலஞ்சம் வாங்குவதாகவும், குறிப்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள (ஒருவரின் பெயரை குறிப்பிட்டு) அவர் இலஞ்சம் பெறுவதாகவும் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் பொலிஸார் அவரை சமரசம் செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

No comments:

Post a Comment