கைக்குண்டு மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

கைக்குண்டு மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது

அதுருகிரிய, அதிவேக நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் கைக்குண்டு மற்றும் ஹெரோயினுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அதுருகிரிய பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று (04) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை சோதனையிட்ட போதே சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சந்தேகநபர்களிடம் இருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரு கைக்குண்டுகளும் ஹெரோயின் 830 கிராமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகம மற்றும் பேருவளை பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதுடன் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment