ஜனாதிபதி செயலகத்தின் புதிய பணிக்குழாம் தலைவராக மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவராகவுகம் பணிபுரிந்த ஹேமசிறி பெனாண்டோ, சிறந்த நிர்வாகத் துறை அறிவு நிறைந்தவராவார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான ஹேமசிறி பெனாண்டோ, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார், தபால் அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ளதோடு, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள், ஶ்ரீ லங்கா டெலிகொம் ஆகியவற்றின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment