2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு ஓட்டமாவடி பாத்திமா சஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரியிலிருந்து தோற்றிய 16 மாணவிகளில் 11 பேர் பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதியினை பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவிகளுக்கு அரபுக் கல்லூரியின் நிருவாக சபை, அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
தெரிவான மௌலவியா, மாணவிகளின் விபரங்கள்
01. மௌலவியா. இ.த. பாத்திமா சப்னா - ஓட்டமாவடி
கிழக்குப்பல்கலைக்கழகம்
02. மௌலவியா. ஆ.லெ.பா. றிஹானா - காவத்தமுனை
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
03. மௌலவியா. அ.பா. முபீஸா - காவத்தமுனை
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
04. மௌலவியா. க.பா. பர்மிலா - மாவடிச்சேனை
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
05. மௌலவியா. ப.பா. ஆயிஷா - பிறைந்துறைச்சேனை
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
06. மௌலவியா. மு.ச.பா. றிஸகானா - பொலன்னறுவை
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
07. மௌலவியா. மு.அ.பா. ஹஸீனா - பொலன்னறுவை
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
08. மௌலவியா. ஹா.பா. ஷப்னா - பொலன்னறுவை
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
09. மௌலவியா. ப.பா. இல்மா - மாத்தளை
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
10. மௌலவியா. மு.தௌ.பா. பஸ்லா - மருதமுனை
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
11. மௌலவியா. க.பா. நஜீரா - பொத்துவில்
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
இக்கல்லூரியின் தற்போதைய நிருவாக சபைத் தலைவராக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். எம்.ரீ.எம். றிஸ்வி மஜீதி அவர்கள் கடமையாற்றி வருவதுடன், அவர் தலைமைப் பொறுப்பினை ஏற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற இத்தருணத்தில் இக்கல்லூரியினை மிகத்திறன்படவும் நடாத்தி வருகின்றார்.
இக்கல்லூரியின் தலைமைத்துவத்தினைப் பொறுப்பெடுத்த காலகட்டம் தொட்டு இன்றுவரை இக்கல்லூரியின் பௌதீக வளங்கள் போதியளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கான பல்வேறுபட்ட திட்டங்களையும் மேற்கொண்டு செயற்படுத்தி வருகின்றார்.
அத்துடன், கடந்த காலங்களை விட இப்போதுள்ள காலகட்டத்தில் இக்கல்லூரியிலிருந்து அதிகளவான மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான உயர்வுகளை இக்கல்லூரி காணவேண்டும் என்பதற்காகவும் பல்வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டு செயலாற்றி வருகின்றார்.
மேலும், கடந்த ஆறு தொகுதி மாணவர்களுக்கான அதாவது 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை இக்கல்லூரியிலிருந்து வெளியாகிய மௌலவியா மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு விழாவும் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மிகச் சிறப்பாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றது.
இவ்வாறாக வளர்ச்சியினை எதிர்நோக்கிச் செல்லும் சந்தர்ப்பத்தில் மென்மேலும் எதிர்காலத்தில் இன்னும் பல வளர்ச்சிகளைக் கண்டு சிறந்ததொரு பெண்கள் அரபுக் கல்லூரியாக இதனை கொண்டு செல்வதற்கான திட்டங்களையும், முயற்சிகளையும் தற்போதுள்ள நிருவாகத் தலைமையான அஷ்ஷெய்க். எம்.ரீ.எம். றிஸ்வி மஜீதி அவர்கள் நிருவாக சபையினரின் பூரண ஒத்துழைப்புடன் மிகத் திறன்பட மேற்கொண்டும் வருகின்றார்.
No comments:
Post a Comment