ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த படியாக உலகின் முன்னணி இ -காமர்ஸ் நிறுவனமான அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்துள்ளது.
இ - காமர்ஸ் சந்தையில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்க நிறுவனமான அமேசான், கடந்த சில ஆண்டுகளாக கனிசமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பை கடக்கும் என சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய பங்குச்சந்தை திறந்ததும் அந்நிறுவனத்தின் மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது.
ஒரு கட்டத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பை அமேசான் எட்டியது. கடந்த 10 மாதங்களில் அந்த நிறுவனத்தின் மதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 2-ம் திகதி ஆப்பிள் இந்த சாதனையை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை எட்டியது.
No comments:
Post a Comment