எதிர்வரும் 01ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் கவணயிர்ப்பு போராட்டம் ஐ.நா வரையில் ஒலிக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 29, 2018

எதிர்வரும் 01ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் கவணயிர்ப்பு போராட்டம் ஐ.நா வரையில் ஒலிக்க வேண்டும்

எதிர்வரும் 01.10.2018 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் கவணயீர்ப்பு போராட்டமானது ஐக்கிய நாடுகள் சபை வரையில் ஒலிக்க வேண்டும் என்கின்றார் மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி.

சென்ற மாதம் நடைபெற்ற சர்வதேச காணாமலாக்கப்பட்டவர்கள் தினம் தொடர்பாக வடக்குக் கிழக்கு மாவட்டங்களில் அடுத்தடுத்துள்ள மாதங்களில் தொடர் கவணயீர்ப்பு போராட்டத்தை நடத்துவது சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்க எதிர்வரும் 01.10.2018ஆம் திகதி நடைபெறவிருக்கும் பேரணியுடன் கூடிய கவணயீர்ப்பு போராட்டம் தொடர்பாக இன்று 29 ஆம் திகதி மட்டக்களப்பு இணையம் அரச்சார்பற்ற நிறுவனங்களின் மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கமைய அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார். சர்வதேச காணாமலாக்கப்பட்டவர்கள் தினம் சர்வதேச சிறுவர் தினம் ஆகிய இரு தினங்களையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் 01.10.2018 ஆம் திகதி காலை 08.30 மணிக்கு மட்டக்களப்பு சின்னாஸ்பத்திரி முன்பாகவிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு நகரிலுள்ள காந்தி பூங்காவிற்கு சென்றடைந்து அங்கு எமது எதிர்ப்பு போராட்டம் நடைபெறும்.

அந்த வகையில் எமது போராட்டமானது வடகிழக்கு இணைந்த ஒரு போராட்டமாக அமையவுள்ளது அதனடிப்படையில் 8 மாவட்டங்களில் இருந்து எமது போராட்டத்திற்கு வழுச்சேர்க்கவுள்ளனர்.

அத்துடன் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி சென்று இலங்கையின் பிரச்சனைகளை உள்ளக பொறிமுறையின் பிரகாரம் விசாரித்து தீர்வு பெறமுடியும் சர்வதேச விசாரணை வேண்டாம் என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

ஆகையால் அன்று நடைபெறவிருக்கும் போராட்டத்தின் போது எழுப்புகின்ற எமது குரல்கள் ஐ.நா வரை ஒலிக்க வேண்டும் அத்துடன் எமது போராட்டத்திற்கு கிழக்குப் பல்கலைக்கழகத்து மாணவர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர் அதனால் இப்போராட்டம் வெற்றி பெரும் என குறிப்பிட்டுக்கொள்கின்றேன் என மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வூடக சந்திப்பின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் எஸ்.அரியமலர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.புவனராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment