ரயில் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயணிகள் தற்போது கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளப் பிரச்சினையை முன்வைத்து ரயில் சாரதிகள் மற்றும் பாதுகாவலர்களை உள்ளடக்கிய பல தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக தற்போது கோட்டை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் ரயில்வே தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.
இதனால், 3 மணிக்கு பின்னர் கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன.
தமது கோரிக்கைகள் தொடர்பான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகவும் இலங்கை ரயில் பாதுகாவலர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் சீ.எம்.பீ. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனுடன் தொடரான செய்திக்கு
https://www.newsview.lk/2018/08/0300.html
இதனுடன் தொடரான செய்திக்கு
https://www.newsview.lk/2018/08/0300.html
No comments:
Post a Comment